ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 60 ரன்னும் எடுத்தார். ஹெட்மையர் 37 ரன்கள் அடித்தார். ரிஷாப் பண்ட் 51 ரன் எடுத்து அவுட்டாகாமால் இருந்தார்.
அடுத்து இறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடினார். அவர் 44 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்குர் ரன் எடுக்காமலும், அம்பதி ராயுடு ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய டோனி, 1 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு வழங்கப்பட்டது.