லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.984 அதிகரித்து ரூ.2,840 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ.393 அதிகரித்து ரூ .1,136 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலையும் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,257 அதிகரித்து ரூ.2,750 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ.503 அதிகரித்து ரூ.1,101 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
2.5 கிலோ சிலிண்டர் ரூ.231 அதிகரித்து ரூ.520 ஆக உயர்ந்துள்ளது. சிமென்ட் மற்றும் கோதுமை மாவு போன்ற பிற பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையில், பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மா இன்று சந்தைக்கு அனுப்பப்படும் என்று கூறுகிறது. ஒரு கிலோ பால் மா ரூ .250 அதிகரித்து ரூ .1,195 ஆகவும், 400 கிராம் பால் மா பாக்கெட் ரூ .100 அதிகரித்து ரூ .480 ஆகவும் விற்பனை செய்யப்படும்.