புதன்கிழமை 13 ஜூலை 2021 புரட்டாதி 27
நல்ல நேரம் 09:00 AM – 10:00 AM
நட்சத்திரம் பூராடம் மாலை 2.54 மணி வரை. பிறகு உத்திராடம்
திதி வளர்பிறை அஷ்டமி
இராகுகாலம் 12:00 Noon – 01:30 PM
எமகண்டம் 07:30 AM – 09:00 AM
குளிகை 10:30 AM – 12:00 Noon
சந்திராஷ்டமம் ரிஷபம் இரவு 8.41 வரை மிதுனம்
மேஷம்
துயரங்கள் தீர துர்க்கையை வழிபட வேண்டிய நாள். செல்வநிலை உயரும். பக்கபலமாக இருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.
ரிஷபம்
காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தள்ளிவைப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. வரவு வருவதற்கு முன்பே செலவுகள் காத்திருக்கும்.
மிதுனம்
இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவமுன்வருவர். வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.
கடகம்
வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாள். ஊர் மாற்றச் சிந்தனை மேலோங்கும். உறவினர் பகை அகலும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். சகோதர ஒற்றுமை பலப்படும்.
சிம்மம்
பால்ய நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். தனவரவு தாராளமாக வந்துசேரும். கல்யாணக் கனவுகள் நனவாகலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். சொத்துகளால் லாபம் உண்டு.
கன்னி
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நூதனப் பொருட்களை வாங்கிச்சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பொதுநலத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
வரவும் செலவும் சமமாகும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொலைபேசி மூலம் நல்ல தகவல் கிடைக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகளில் தாமதம் ஏற்பட்டாலும் நல்ல விதமாக முடிவடையும்.
விருச்சிகம்
தொட்ட காரியம் வெற்றி பெற துர்க்கையை வழிபட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
தனுசு
நட்பால் நல்ல காரியம் நடை பெறும் நாள். பிள்ைளகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. செய்தொழில் மூலம் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.
மகரம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.
கும்பம்
செல்வாக்கு மேலோங்கும் நாள். செய்தொழிலில் சில மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும். பயணத்தால் பலன் உண்டு.
மீனம்
ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். உத்தியோக முயற்சி பலன் தரும். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். உறவினர் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடை பெறலாம்.