அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தமது போராட்டம் தொடரும் என அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.