வியாழக்கிழமை 14 ஜூலை 2021 புரட்டாதி 28 ஆயுத பூஜை, மகா நவமி
நல்ல நேரம் 09:00 AM – 12:00 Noon
நட்சத்திரம் உத்திராடம் மதியம் 1.45 வரை. பிறகு திருவோணம்
திதி வளர்பிறை நவமி
இராகுகாலம் 01:30 PM – 03:00 PM
எமகண்டம் 06:00 AM – 07:30 AM
குளிகை 09:00 AM – 10:30 AM
சந்திராஷ்டமம் மிதுனம்
மேஷம்
வளர்ச்சி கூட வழிபாட்டை மேற் கொள்ள வேண்டிய நாள். பாராட்டும். புகழும் கூடும். நிதி நிலை உயர எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும்.
ரிஷபம்
தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் நாள். தொகை வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளி வட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பகை விலகி பாசம் கூடும்.
மிதுனம்
அமைதி கிடைக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். உறவினர்கள் தொடர்பான பணிகளுக்காக அலைச்சல்கள் உருவாகலாம்.
கடகம்
சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். சான்றோர்களின் சந்திப்புக் கிட்டும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறலாம். இறை வழிபாட்டில் இதயத்தைச் செலுத்துவீர்கள்.
சிம்மம்
சகலயோகமும் வந்து சேர சரஸ்வதியை வழிபட வேண்டிய நாள். நண்பர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சுபச்செலவு உண்டு.
கன்னி
சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். தொழில் சம்பந்தப்பட்ட வகையில் புதிய அனுபவங்கள் ஏற்படலாம். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கும் எண்ணம் மேலோங்கும்.
துலாம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். பொருளாதார நிலை உயரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். உடல்நலத்தில் சோர்வு ஏற்பட்டு அகலும்.
விருச்சிகம்
காரிய வெற்றிக்கு கலை வாணியை வழிபட வேண்டிய நாள். நல்ல தகவல் இல்லம் தேடி வரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய ஒப்பந்தங்கள்வந்து சேரும்.
தனுசு
மனக்குழப்பம் அகலும் நாள். ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் கூடுதல் விழிப்புணா்ச்சி தேவை . வரவை விடச் செலவு கூடும். பயணிகளால் பலன் உண்டு.
மகரம்
யோகமான நாள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வியாபாரம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.
கும்பம்
தேக ஆரோக்கியம் சீராகும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். தெய்வத் திருப்பணிகளுக்கு கொடுத்து உதவுவீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
மீனம்
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும். வருமானம் போதுமானதாக இருக்கும். வீடு கட்டும் பணியில் தீவிரம் காட்டுவீர்கள்.