மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பன்சேனை கிராம வயல் பகுதியில் இருந்து ஆர்பிஜி லோஞ்சர் ஆயுதம் ஒன்று இன்று (25) மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த RPG லோஞ்சர், வேளாண்மை பயிர்ச் செய்கைக்காக வயல் நிலங்களை பண்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அகப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராம மக்களின் தகவலுக்கமைவாக சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் ஆயுதத்தை மீட்டு வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த ஆயுதம் கடந்த யுத்த காலத்தில் கைவிடப்பட்டதாக இருக்கலாம் என தெரிய வருகிறது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.