மேஷம்
மனஉறுதியுடன் செயல்படும் நாள். பகை மாறிப் பாசம் கூடும். வரவு திருப்தி தரும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மருத்துவச் செலவுகள்குறைந்து மனநிம்மதி கூடும். சகோதர ஒற்றுமை பலப்படும்.
ரிஷபம்
வரவறிந்து செலவு செய்ய வழி வகை செய்து கொள்ளும் நாள். கொள்கை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
முகத்தில் பொலிவும், அகத்தில் தெளிவும் கொண்டு செயல்படும் நாள். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். வருமானம் உயர வழிபிறக்கும்.
கடகம்
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். சகோதரத்தின் வழியில் இணக்கம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம்.
சிம்மம்
ஆர்வம் காட்டாத வேலைகளில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவாகப் பேச்சு நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்தி உண்டு.
கன்னி
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். வீடு கட்டும் பணியைத் தொடரலாமா என்று சிந்திப்பீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் மேலோங்கும்.
துலாம்
எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுக்கும் நாள். உற்றார், உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பர். குடும்பத்தினர்களின் ஆதரவு குறையும். இன்று முன்யோசனையுடன் நடந்து கொள்வது நல்லது.
விருச்சிகம்
மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். தொழிலில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும்.
தனுசு
ஆதாயம் கிடைக்க அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். உடல்நலனில் கவனம் தேவை . குடும்பச்சுமை கூடும்.
மகரம்
மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்
இல்லாதவர்களுக்கு உதவி செய்து உள்ளம் மகிழும் நாள். வாகனப் பராமரிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். வீடு, இடம் விற்பனை செய்வதிலிருந்த தடை அகலும்.
மீனம்
எதிரிகள் உதிரியாகும் நாள். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரலாம். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு.