யாழ்ப்பாணம், தாவடிச்சந்தியில் பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த தந்தையும், மகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவியை பாடசாலைக்கு தந்தை அழைத்து சென்ற போது இந்த விபத்து நேர்ந்தது.
வற்றாப்பளை அம்மன் என பெயர் பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு இல்லாத பேருந்து, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியது. காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.