மேஷம்
யோகமான நாள். வீடு, இடம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். உடல்நலம் சீராகும். உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும்.
ரிஷபம்
அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
மிதுனம்
ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே கிடைக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
கடகம்
மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். தொழில் வளர்ச்சி பெருகும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.
சிம்மம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழில் தனித்தொழிலாக மாறும். சொத்துகள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.
கன்னி
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதில் நினைத்ததைச் செய்து முடிக்க மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழிக்காரியங்கள் அனுகூலமாக முடிவடையும். வரவு திருப்தி தரும்.
துலாம்
தொட்டது துலங்கும் நாள். புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வருமோ, வராதோ என நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவர்.
விருச்சிகம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். உத்தியோக உயர்வு உண்டு. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
தனுசு
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். பேச்சில் நிதானம் தேவை . நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும்.
மகரம்
கடிதம் மூலம் கனிந்த தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
கும்பம்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உறவினர் பகை அகலும். முக்கியப் புள்ளிகள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக விளங்குவர். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைப்பட்ட வருமானம் தானாக வந்து சேரலாம்.
மீனம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு இன்றைய பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு.