மேஷம்
நன்மைகள் நடைபெறு ம் நாள். நண்பர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளப் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். அரசியல்வாதிகள் அனுசரணையாக இருப்பர்.
ரிஷபம்
விரோதங்கள் விலகும் நாள். விருந்தினர்களின் வருகை உண்டு. வரவு அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டு கொள்வீர்கள். குடும்பத்தினர்களின் கோபம் மாறும். பழைய கடனில் ஒரு பகுதியைக் கொடுத்து மகிழ்வீர்கள்.
மிதுனம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நம்பிக்கைகள் நடைபெறும். தனவரவு திருப்தி தரும். சகோதர்களிடம் ஒப்படைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
கடகம்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சிக்கு தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் கைகொடுக்கும்.
சிம்மம்
மற்றவர்களின் பிரச்சினையில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டிய நாள். மாற்றுக் கருத்துடை யோரின் எண்ணிக்கை உயரும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளவும்.
கன்னி
உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள். உள்ளத்திலொன்றும், உதட்டிலொன்றும் வைத்துப் பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். முயற்சியில் இருந்த தடை அகலும்.
துலாம்
அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். அடகு வைத்த நகைகளை மீட்பது பற்றி ஆலோசனை செய்வீர்கள். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.
விருச்சிகம்
இல்லத்தில் இனிய தகவல் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வரவு திருப்தி தரும். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
நாலா புறமும் இருந்து நல்ல தகவல் வந்து சேரும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். மனக்கசப்புகள் மாறும்.
மகரம்
பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்க்க வேண்டிய நாள். பிரச்சினைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை விற்க நேரிடலாம்.
கும்பம்
குழப்பம் அகலும் நாள். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வருமானம் பெருக வழியென்ன என்று யோசிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும்.
மீனம்
சேமிப்பு கரையும் நாள். திட்ட மிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் செய்ய நேரிடும். நண்பர்களை அனுசரித்துக் கொள்வது நல்லது. வீண்பழிகள் ஏற்படாமலிருக்க பணி புரியுமிடங்களில் கவனம் தேவை.