மேஷம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். வாகனப் பழுதுகளைச் சரிசெய்ய முன்வருவீர்கள்.
ரிஷபம்
சான்றோர்களின் தொடர்பால் சந்தோஷம் கூடும் நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். அரசு வழிச் சலுகை எதிர்பார்த்தபடி கிடைக்கலாம்.
மிதுனம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புகழ் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து உதவி செய்வர். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும் நாள். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் உடனுக்குடன் செலவாகி விடும். மருத்துவச் செலவு உண்டு.
சிம்மம்
பிரச்சினைகளைச் சந்திக்காதிருக்க அர்ச்சனைகள் செய்ய வேண்டிய நாள். பிள்ளைகளால் தொல்லை உண்டு. வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்.
கன்னி
விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். விரைந்து முடிக்க வேண்டிய பணியில் தாமதம் ஏற்படும். ஊா்மாற்ற சிந்தனைகள் உருவாகும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
துலாம்
விரயத்திற்கேற்ற லாபம் வந்து சேரும் நாள். வீடு, இடம் வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். உத்தியோக மாற்ற சிந்தனை உறுதியாகலாம்.
விருச்சிகம்
பாசம் மிக்கவர்களின் நேசம் கூடும் நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
தனுசு
நடக்காது என்று நினைத்த காரியம் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும் நாள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். மதிய நேரத்திற்குப் பிறகு எதிர்பார்த்த இடத்திலிருந்த உதவிகள் கிடைக்கும்.
மகரம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விவகாரங்கள் வீடு தேடி வரலாம். கடன்சுமை கூடும். சொத்துகள் வாங்கும் போது பத்திரப் பதிவில் கவனம் தேவை. பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.
கும்பம்
உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும் நாள். உடன்பிறப்புகளிடம் கொடுத்த வேலை உங்களிடமே வந்து சேரலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. வரவும், செலவும் சமமாகும்.
மீனம்
முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். சங்கிலித்தொடர்போல வந்த கடன் சுமை தீரப் புதிய வழியில் முயற்சி செய்வீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. உறவினர் பகை அகலும்.