மேஷம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். பெற்றோர் மீதான பாசம் அதிகரிக்கும். வாகனப் பழுதுகளைச் சரிசெய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலும்.
மிதுனம்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடுமாற்றம், உத்யோக மாற்றம் பற்றி முடிவெடுப்பீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் பட்டும் படாமல் நடந்து கொள்வது நல்லது. வேலைப்பளு கூடும்.
கடகம்
தடைகள் அகலும் நாள். காணாமல் போன பொருளொன்று கைக்கு கிடைக்கலாம். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரலாம். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செல்லும்.
சிம்மம்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ் மிக்கவர்கள் போன் மூலம் தொடர்பு கொள்வர். விலையுர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
கன்னி
தொலைபேசி வழித்தகவல்களால் மகிழ்ச்சி கூடும் நாள். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தோன்றும்.
துலாம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். தொழில் ரீதியாகத் தீட்டிய திட்டம் நிறைவேறும். மறக்க முடியாத புதிய அனுபவங்களைப் பெறும் வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்
உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். குடும்பப்பிரச்சினை நல்லமுடிவிற்கு வரும்.
தனுசு
யோகமான நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்யோக மாற்றம் உறுதியாகலாம்..
மகரம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும். மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
கும்பம்
நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வருமானம் திருப்தி தரும். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ைளகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.
மீனம்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்க ஒத்துழைப்புச் செய்வர். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள பணத்தைச் செலவிட நேரிடலாம்.