யாழ்.வட்டுக்கோட்டையில் பிறந்து 52 நாட்களேயான சிசு தாய்ப்பால் புரையேறிய நிலையில் உயிரிழந்துள்ளது.
நேற்றைய தினம் அதிகாலை குழந்தை தாய்ப்பால் குடித்துவிட்டு உறங்கியுள்ளது.
இதனையடுத்து நேற்று அதிகாலை 3.30 மணியளவில் குழந்தைக்கு மூக்கு வழியாக இரத்தம் வடிந்ததை பெற்றோர் அவதானித்த நிலையில் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தை சேர்க்கப்பட்டது.
எனினும் குழந்தை இறந்துள்ளது. சம்பவம் தொடர்பான மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.