கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று (14) அதிகாலை 3மணியளவில் இந்தவிபத்து நிகழ்ந்தது.
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பிபிரி தனியார் சொகுசு பேருந்து, மதவாச்சிக்கு அணமையாக விபத்திற்குள்ளானது. டிப்பர் ஒன்று விபத்திற்குள்ளானதையடுத்து, அதன் பின்னால் சென்ற பேருந்து , விபத்திற்குள்ளான வாகனத்தை மோதி விபத்திற்குள்ளானது. பின்னால் சென்ற சொகுசு பேருந்து, விபத்திற்குள்ளான பேருந்தை மோதியது.
இதையடுத்து பேருந்து ஒரு பக்கமாக சரிந்து, மின்கம்பத்துடன் சாய்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக மின்கம்பத்துடன் சாய்ந்ததால் பேருந்து சரிந்து விழவில்லை. பேருந்திற்குள்ளிருந்த பயணிகள் சிலர் சிறிய காயங்களிற்குள்ளாகினர். பாரதூரமான காயங்கள் பதிவாகியிருக்கவில்லை.