மேஷம்
தொழில் முன்னேற்றம் கூடும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதையும் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
ரிஷபம்
நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் கிட்டும்.
மிதுனம்
நண்பர்களின் சந்திப்பால் நன்மைகள் ஏற்படும் நாள். வாகன மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். மங்கலச் செய்திகள் மனை தேடி வந்து சேரும்.
கடகம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். அன்னியதேசத்திலிருந்து வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும்.
சிம்மம்
அந்தஸ்து உயரும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரலாம். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.
கன்னி
சாமர்த்தியமாகப் பேசிச் சாதனை படைக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும். பழைய பிரச்சினைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்
காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பழகியசிலருக்காக கணிசமான பணத்தைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். வழிபாடு வளர்ச்சி தரும்.
விருச்சிகம்
அதிகாலையிலேயே நல்ல செய்திகள் வந்து சேரும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.
தனுசு
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். எடுத்த காரியத்தை இனிதே முடிக்க இல்லத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல்நலம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிடுவீர்கள்.
மகரம்
நீண்ட நாளைய முயற்சி வெற்றி பெறும் நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். வீடு, இடம் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.
கும்பம்
வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். திடீர் செலவுகளைச் சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டு. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும்.
மீனம்
சந்தோஷமான நாள். சகோதர பாசம் கூடும். வருமானம் உயரும். நெடுநாளையப் பிரச்சினை யொன்று திடீரென நல்ல முடிவிற்கு வரலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.