மேஷம்
காலை நேரம் கலகலப்பும், மாலை நேரம் சலசலப்பும் ஏற்படும் நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் உண்டு. நண்பர்கள் தக்க சமயத்தில் கொடுத்துதவுவர். பயணங்களால் ஆதாயம் உண்டு.
ரிஷபம்
எதிர்காலம் இனிமையானதாக அமையத் திட்டங்கள் தீட்டும் நாள். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரலாம். உறவினர் வழியில் ஒத்துழைப்பு உண்டு. வரன்கள் முடிவாகலாம்.
மிதுனம்
புதிய திருப்பம் ஏற்படும் நாள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
கடகம்
சுபச்செலவு ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் ஒருசில தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் அளவாகப் பழகுவது நல்லது.
சிம்மம்
யோகமான நாள். திடீர் தனவரவு உண்டு. தன்னம்பிக்கை யோடு செயல்படுவீர்கள். பொன், பொருள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறலாம். இடம், பூமி வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.
கன்னி
தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் பலன் தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
துலாம்
வருமானம் வரும் வழியைக் கண்டுகொள்ளும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வருவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்
இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். ஆன்மிகப் பயணம் ஆதாயம் தரும்
விதம் அமையும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
தனுசு
தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும் நாள். எந்த முக்கிய முடிவும் எடுக்கும் பொழுதும் குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். வியாபாரம், தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
கும்பம்
புதிய பாதை புலப்படும் நாள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோக முயற்சியில் தாமதம் ஏற்படும்.
மீனம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். அதிக விரயம் ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். விட்டுப் போன வரன்களைப் பரிசீலனை செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் தலைமையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.