மேஷம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். வரவை எதிர்பார்த்துச் செய்த காரியமொன்றில் திடீரெனச் செலவுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.
ரிஷபம்
இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் போகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பயணம் பலன் தரும்.
மிதுனம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்காது. வாங்கல் கொடுக்கல்களால் பிரச்சினை ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.
கடகம்
நேரில் சந்திக்கும் நபர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்கமான வாழ்க்கை மாறவும், எதிர்கால வளர்ச்சிக்கும் திட்டங்களைத் தீட்டுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும்.
சிம்மம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். நல்ல மனிதர்களின் நட்பு கிட்டும். இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்ற சிந்தனை அதிகரிக்கும்.
கன்னி
ஊர்மாற்றம், இடமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். உறவினர் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நேற்று ஏற்பட்ட பிரச்சினை இன்று அகலும்.
துலாம்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும்.
விருச்சிகம்
பாராட்டும், புகழும் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பர். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.
தனுசு
விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. இடம், பூமி வாங்குவதில் இருந்த தடைகள் அகலும்.
மகரம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பணவரவு திருப்தி தரும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். நண்பர்கள் நல்ல செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
கும்பம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. ஆரோக்கியத்திற்காக செலவிடுவீர்கள்.
மீனம்
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். பிரச்சினைகளைச் சமாளிக்கப் பிறரிடம் ஆலோசனை கேட்பீர்கள்.