கம்பஹா – மரிஸ்வத்தாவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 4 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் பைக்கில் வந்த இரண்டு பேர் கம்பாஹா – மரிஸ்வத்தாவில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 39 மில்லியன் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஒரு மில்லியன் பணம் ஆகியவை துப்பாக்கியைக் காட்டி பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
இரண்டு ஆண்கள் தங்களை ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட்டுகளால் மூடி மறைத்த வண்ணம் நேற்று மதியம் 2 மணியளவில் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் பணத்தையும் நகையினையும் கொள்ளையடித்துள்ளனர்.