பெண்களை விட ஆபாச பொம்மையுடன் டேட்டிங் செய்வது ஈஸியாக இருக்கிறது என சீனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் வசித்து வரும் 36 வயதான ஷி தியான்ராங் தான் ஆபாச பொம்மைகளுடன் டேட்டிங் செய்து வருகிறார். அந்த பொம்மைகளுக்கு ஐபோன் உள்ளிட்ட விலையுயர்ந்த பரிசு பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
தனது செயல் பொம்மையை காயப்படுத்தும் என்பதால் அவர் இதுவரை பொம்மைகளிடம் அத்துமீறி நடந்து கொள்ளவில்லை. இதுவரை அந்த பொம்மைகளுக்கு ஒரு முத்தம் கூட கொடுத்ததில்லை.
பொம்மையின் உடல் பகுதிகளில் எந்தவித சேதமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தனக்கு தானே சில நெறிமுறைகளை அவர் வகுத்துக் கொண்டுள்ளார். மோச்சி என்ற பொம்மையுடன் தியான்ராங் வாழ்கிறார். அந்த பொம்மையுடனே உறங்குகிறார். அதை குளிப்பாட்டுகிறார்.
அதன் உடம்புக்கு பவுடர் பூசி, அழகான உடைகளை அணிவித்து விடுகிறார். 10 ஆண்டுக்கு முன்பு ஹாங்காங்கில் ஒரு கடையில் ஒரு பொம்மையை பார்த்த போது அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்துவிட்டதாக தெரிவிக்கிறார். ஆனால் அதன் விலை இந்திய மதிப்பில் 9 லட்சம் என்பதால் அதை அவர் வாங்கவில்லை என்கிறார்.
இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் மோச்சி பொம்மையை இந்திய மதிப்பில் 1,13,400 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அதிலிருந்து அந்த பொம்மையுடன் தனது நேரத்தை செலவிடுகிறார். தியான்ராங்கிடம் உண்மையான பெண்களுடன் காதல் இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில், எனக்கு ஏற்கெனவே காதலிகள் இருந்தனர். ஆனால் அவர்கள் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே குறியாக இருந்தனர். இருவரும் ஒன்றாக இருக்கும் நேரங்களில் அவர்கள் தொலைபேசிகளில் மட்டும் அதிகம் பேசி பணத்தை செலவிட்டது தனக்கு பிடிக்கவில்லை என்கிறார்.
இதனால்தான் பொம்மையுடன் முழு கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பரில் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாடிபில்டர் ஒருவர் ஆபாத பொம்மையுடன் 8 மாதம் டேட்டிங் செய்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
நன்றி :tamil.oneindia