பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பம் ஆகி இறுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில், இந்தியளவில் பிக்பாஸில் டாப் 5 சிறந்த போட்டியாளர்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு இடத்தை வெவ்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் போட்டியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆனால், 5 ஆம் இடத்திற்கான சிறந்த போட்டியாளராக பிக்பாஸ் சீசன் 4 இன் போட்டியாளர் ஆரி இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எந்த ஒரு பிரபலமும் டாப் 5ல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.