அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது சிறுபிள்ளைகள் ஐவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதுடன், வீட்டையும் தீக்கிரையாக்கிய பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
25 வயதான ஓரியானாமையர்ஸ் எனும் இப்பெண் 4 பிள்ளைகளை ‘ஷொட்கன்‘ ரக துப்பாக்கி மூலம் சுட்டுக்கொன்றுள்ளார். வேர்ஜீனியா மாநிலத்தில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப்பிள்ளைகளின் மூவர் அவரின் சொந்தப்பிள்ளைகளாவர். ஏனைய இருவரும், அவரின் கணவரின் முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த பிள்ளைகளாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷோன்டோசன்பம்கார்னர்(7) ,றைலிஜேம்ஸ்பம்கார்னர்(6), கியன்மையர்ஸ்(4), அரிகிலேநோவாமையர்ஸ்(3), ஹைகன், ஜிராசசிமையர்ஸ்(1) ஆகிய 4 பிள்ளைகளே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஓரியானாமையர்ஸ் எழுதிய பல குறிப்புகள் சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. தான் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவற்றில் ஓரியானா எழுதியிருந்தார்.