நடிகை பிரியங்கா சோப்ரா தனது அனுபவ புத்தகத்தில் நடிகர் விஜயுடன் நடித்த முதல் திரைப்பட அனுபவம் குறித்து எழுதியுள்ளார்.
38 வயதான பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ‘முற்றுப்பெறாத…’ (Unfinished) என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தில் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். பிரியங்கா சோப்ராவின் தமிழில் நடித்த முதல் திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் நடித்தமை குறித்தும் அவரிடம் கற்றுக்கொண்டதை குறித்தும் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, 2000 ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்ற சிறிது நாட்களிலேயே திரையுலகில் நுழைந்தேன். முதல் படம் தமிழில் தமிழன். என் முதல் கதாநாயகன் தளபதி விஜய். விஜய்யின் பணிவு மற்றும் ரசிகர்களுடன் நட்பாக பழகும் விதம் அவர் மீது எனக்கு ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கியது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, எனது வலைத் தொடரான குவாண்டிகோவின் படப்பிடிப்பில் நியூயார்க் நகரில் இருந்தேன். படப்பிடிப்பு நடத்தி வருவதை ரசிகர்கள் அறிந்து, புகைப்படம் எடுக்க திரண்டனர். நான் மதிய உணவு இடைவேளையின் போது ரசிகர்களுடன் நின்று புகைபடம் எடுத்து கொண்டேன் அது எனது முதல் சக நடிகர் விஜய் எனக்கு கற்றுத்தந்த பாடம் ஆகும் என கூறியுள்ளார்.