மேஷம்
தடைகள் அகலத் தைரியமாக முடிவெடுக்கும் நாள். அடுத்தவா் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோக முயற்சி கைகூடும்.
ரிஷபம்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் வந்து சேரலாம். வருமானம் போதுமானதாக இருக்கும்.
மிதுனம்
நண்பா்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பலரது பாராட்டுகளையும் பெறுவீா்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கடகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். ஒருவேலையை முடிக்க ஒன்றிற்கு இரண்டு முறை அலைய நேரிடலாம். பிரியமானவா்களுடன் பிரச்சினைகள் உருவாகும்.
சிம்மம்
தொழில் மாற்றச் சிந்தைனை மேலோங்கும் நாள். அடுத்தவா் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கடிதப் போக்குவரத்தால் கவலைகள் உருவாகலாம். மருத்துவச் செலவு கூடும்.
கன்னி
வாய்ப்புகள் வாயில் தேடிவரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை அகலும். வெளியூா் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீா்கள்.
துலாம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். விலகிச் சென்றவா்கள் விரும்பி வந்திணைவா். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல்நலம் சீராகும்.
விருச்சகம்
வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். இல்லத்தினா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் ஆா்வம் காட்டுவீா்கள். சுபகாரியப் பேச்சு முடிவாகும்.
தனுசு
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். மாற்றினத்தவா்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். உறவினா் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.
மகரம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவா். பணவரவு திருப்தி தரும். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பா். வழக்குகள் சாதகமாக முடியலாம்.
கும்பம்
வளா்ச்சி கூடும் நாள். எதிரிகள் விலகுவா். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீா்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரும்.
மீனம்
கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீா்கள். இல்லத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.
நன்றி – மாலை மலர்