விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு வெடிவிபத்தில், அங்கு வேலை செய்து வந்தவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம். அங்கு மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலை என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து விதமான பட்டாசுகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (12.02.2021) முற்பகல், திடீரென பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடித்து சிதறியதில் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் தீ பரவியதால், உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் விபத்தில் சிக்கினர். அதற்குள் தொழிற்சாலை முழுவதும் கருபும்புகை சூழ்ந்து கொண்டதால், அங்கு பணியாற்றிய ஊழியர்கள் வெளியே செல்ல முடியாமல், தீயில் சிக்கி கருகினர். சிலர் காயங்களுடன் வெளியேறினர்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல் கட்ட விசாரணையில், 2 பேர் பலியானதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது பலி எண்ணிக்கை 17 ஆக உயர்நந்துள்ளதாகவும், பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் காயமுடன் சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுமுகிறது.
இந்த வெடி விபத்தில் அங்குள்ள பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.