ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று, இந்தியாவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவுள்ளது.
கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
“கடந்த 2013 ஆம் ஆண்டு ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா, அதன் பின்னர் நடுநிலை வகித்து வந்தது.
இம்முறை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்தியாவை கோருவோம். இந்தியாவிலும் பெருமளவான தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்தே இந்தியா செயற்படும் என்று நினைக்கின்றேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்.