வவுனியாவிற்கு 10/02/2021 அன்று விஜயம் செய்த யாழ்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டிருந்தார்.
அந்தவகையில் புளியங்குளம் புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் வழிபாடு செய்தபின்னர், ஆலய தர்மகர்த்தாக்கள் மற்றும் கிராமப் பெரியவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
இந்திய மத்திய அரசின் மானிய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் மாதிரிக் கிராமத் திட்டத்தின் கீழ், வவுனியா மெனிக்பாமிலுள்ள அருணோதயம் நகரில் இடம்பெறும் வீட்டுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் பயனாளிகளுடன் கலந்துரையாடியிருந்தார்