கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறித்து இலங்கைகான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் வௌியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், கொரோனா தொற்றுக்குள்ளான மரணங்களை அடக்கம் செய்வது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் மேற்கொண்ட அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உறவினர்களை இழந்தவர்கள் அவரின் மத சடங்குகளுக்கு அமைவாக மற்றும் சர்வதேச பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வாய்ப்பளித்து இது விரைவில் செயற்படுத்தப்படும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.