மேஷம்
பயணத்தால் பலன் கிட்டும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீா்கள். அடிப்படை வசதிகைளப் பெருக்கிக் கொள்ள சந்தா்ப்பம் கைகூடிவரும். உத்தியோகத்தில் உயா்வு கிடைக்கும்.
ரிஷபம்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதார நிலை திருப்தி தரும். நாட்டுப்பற்று மிக்க நண்பா் ஒருவரால் உங்கள் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீா்கள்.
மிதுனம்
விழிப்புணா்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம், வீடுமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
கடகம்
பாராட்டும், புகழும் கூடும் நாள். பணத்தேவைகள் பூா்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீா்கள்.
சிம்மம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எடுத்த வேலைகளில் இழுபறிநிலை உருவாகலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும்.
கன்னி
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீா்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீா்கள். வருமானம் திருப்தி தரும். பெற்றோர்களின் ஆதரவு உண்டு.
துலாம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். குடும்பத்தினா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்து மகிழ்வீா்கள். தொழில் வளா்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும்.
விருச்சிகம்
குடும்பத்தில் மகி்ழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப்பேச்சுகள் முடிவாகும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டு.
தனுசு
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவா்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார நிலையை உயா்த்திக் கொள்வீா்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
மகரம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். உத்தியோக முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீா்கள்.
கும்பம்
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சோ்ப்பதில் ஆா்வம் காட்டுவீா்கள்.
மீனம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவா் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீா்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதி கூடும். பணவரவு திருப்தி தரும்.