யாழ்.நவாலி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் வீட்டின் வெளிக்கதவுகளை சேதப்படுத்தியதுடன் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.
இச் சம்பவம் 18.02.20217 அன்று அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீட்டில் தரித்து வைக்கப்பட்ட ஆட்டோ ஒன்று தீ பிடித்து எரிந்துள்ளது.
அதிகாலையில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த வன்முறை கும்பல் வீட்டின் கதவுகளை அடித்து சேதப்படுத்திவிட்டு பெட்ரோல் குண்டு வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இச் சம்பவம் எந்த காரணத்திற்காக இடம்பெற்றது என தெரியவில்லை. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.