மேஷம்
செல்வநிலை உயரும் நாள். வாங்கல்-கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தந்தை வழி உறவினா்களால் தக்க விதத்தில் உதவிகள் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
ரிஷபம்
கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
மிதுனம்
வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன்கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.
கடகம்
யோகமான நாள். நாட்டுபற்று மிக்கவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
சிம்மம்
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.
கன்னி
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். எதிர்பார்த்த தொகை எளிதில் கிடைக்கும். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.
துலாம்
உதிரியாகக் கிடந்த உறவுகள் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் தொகை கிடைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும்.
விருச்சிகம்
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். நிதிநிலை உயரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் தொழில் வெற்றிநடைபோடும்.
தனுசு
பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும்.
மகரம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தெய்வீக சிந்தனை மேலோங்கும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றங்களைச் செய்வீர்கள்.
கும்பம்
உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு அதிகரிக்கும். அதிக விலை கொடுத்துச் சில பொருட்களை வாங்கியும் அதனால் திருப்தியில்லாமல் போகலாம்.
மீனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தேவையான பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும்.