உலகிலேயே அழுக்கான மனிதராக ஈரான் நாட்டைச் சேர்ந்த அமோவ் ஹாஜி அறியப்படுகிறார். கடந்த 67 ஆண்டுகளாக இவர் குளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஈரான் பகுதியில் உள்ள தெஜ்ஹாக் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமோவ் ஹாஜி. இவருக்கு தண்ணீர் என்றாலே பயம். இதனால், கிட்டத்தட்ட 67 ஆண்டுகளாக தண்ணீரில் தன் உடலை நனைத்ததில்லை. குளித்தால் தான் நோய்வாய் பட்டுவிடுவோம் என்று அமோவ் ஹாஜி நம்புகிறார். இதனால், தண்ணீர் பக்கம் எட்டி பார்த்ததில். உடல் முழுக்க புழுதி படந்து அழுக்காகவே அமோல் ஹாஜி காட்சியளிக்கிறார். தன் இளமைக் காலத்தில் நடந்த சில சோக சம்பவங்களால் , அமோவ் ஹாஜி தனியாகவே வசிக்கிறார்.
அமோவ் ஹாஜியின் உணவு பழக்கமும் வித்தியாசமாகவே இருக்கிறது. இறந்த விலங்குகளின் அழுகிய உடற் பாகங்களை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். முள்ளம்பன்றி கறி அமோவ் ஹாஜிக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் தண்ணீர் குடிப்பதை அமோவ் ஹாஜி வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது 87 வயதாகும் அமோவ் ஹாஜிக்கு புகைக்கும் பழக்கமும் உண்டு. அடிக்கடி, தன் உடல் எப்படியிருக்கிறது கார் கண்ணாடிகளில் பார்த்துக் கொள்கிறார். உடல் எவ்வளவுக்கு எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நோய் வராது என்பது அவரின் நம்பிக்கையாக இருக்கிறது. இவருக்கு யாரும் முடி வெட்ட முன் வராததால் முடியை தீயை வைத்து கருக்கிக் கொள்கிறார்.