லங்கா சதொச நிறுவனம் அதிகூடிய இலாபத்தை கடந்த செப்டெம்பர் மாதம் ஈட்டியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
7 வருடங்களுக்கு பின்னர் சதொச நிறுவனம் சுமார் 400 கோடி ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சதொச வரலாற்றில் அதிகூடிய இலாபம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.