2021 ஜனவரி முதல் இதுவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 685 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் – என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிகள், கொவிட் தொற்யைடுத்து ஏற்பட்ட வேலையிழப்பு உள்ளிட்ட காரணங்களால் வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணமுடிகின்றது.
கடந்த வருடம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக நாட்டிலிருந்து 53 ஆயிரத்து 654 பேர் சென்றுள்ள நிலையில், இவ்வருடம் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. இவ்வருட இறுதியாகும்போது சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம்பேர்வரை வெளிநாடு செல்லக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.