பொத்துவில் முதல் பொலிகண்டி p2p என்ற # இடப்பட்டு இன்று அகிம்சை முறையிலான கவன ஈர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது, மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி இந்த பேரணி ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம், இந்த போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.